விவசாய, வீட்டு கடன்கள், நிதி நிறுவனங்களுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் நிதி ஊரடங்கால் நலிவடைந்த பொருளாதாரத்தை சீரமைக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை
மும்பை,ஏப்.18கரோனாவால் ஏற்பட்டுள்ள பொரு ளாதார பாதிப்பை சீரமைக்க, 2ஆவது கட்டமாக ரிசர்வ்வங்கி பல்வேறுசலுகைகளை அறிவித்துள்ளது.
இதில், வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடியும், விவசாயக் கடன், வீட்டுக் கடன், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதற்காக ரூ.50 ஆயிரம் கோடியும் என மொத்தம் ரூ.1லட்சம்கோடியை அது ஒதுக்கியுள்ளது.
கரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த கடந்த மாதம் 25ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட 21 நாள் ஊர டங்கு, வரும் 30ஆம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, 21 நாள் ஊரடங்கு அமலில் இருந்தபோது, 1.7 லட்சம் கோடி மதிப்பிலான சலுகைகளை மத்திய அரசு கடந்த மாத இறுதியில் அறிவித்தது. இதில், வங்கிகளில் 3 மாத இஎம் அய் சலுகை உட்பட பல்வேறு அம்சங்கள் அடங்கும்.
தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதால், பொருளாதார பாதிப்பும் அதிகரித்துள்ளது. முதலில் அறிவிக்கப்பட்ட 21 நாட்கள் ஊரடங்கு காரணமாக முதலீடுகள், ஏற்றுமதி, பொருள்கள் நுகர்வு என 70 சதவீத பொருளாதார செயல்பாடுகள் முடங்கிக் கிடக்கின்றன. தகவல் தொழில் நுட்ப சேவைகள், செய்தித்துறை, மருத்துவம் உட்படசில அத்தியாவசிய துறை சார்ந்த சில நிறுவனங்கள் மட்டும் இயங்கி வருகின்றன.
இதனால், இந்திய பொருளாதாரத்துக்கு கடும் இழப்பு ஏற்படும் என, சென்ட்ரம் நிறுவனம் பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவித்தது. இது போல், உலக வங்கி சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மோசமாக பாதிக்கப்படும். மக்களின் தேவைகளை அரசுகள் நிறைவு செய்யாமல் போனால் உலக நாடுகளில் நிலையற்ற தன்மை உருவாகவும் வாய்ப்பு இருக்கிறது, என்று எச்சரித்திருக்கிறது.
முன்னதாக, கடந்த மாதம் 27ஆம் தேதி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறுகையில், 'கரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு குறித்து ரிசர்வ் வங்கி கண்காணித்து வருகிறது. பின்னடைவை கட்டுப்படுத்த தேவையான நடவ டிக்கைகள் எடுக்கப்படுகின்றன. ரிவர்ஸ் ரெப்போ 49 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
5.5 சதவீதமாக இருந்த வங்கிகளுக்கான ரெப்போ விகிதம் 0.7%குறைக்கப்பட்டு 4.4சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது” என்றார். இந்த சூழ்நிலையில் தற்போது மே 3ஆம் தேதி வரை 2வது ஊரடங்கு நீடிக்கப்பட்டதால் மிகப் பெரும் பொருளாதார நெருக்கடியை அனைத்து துறைகளும் சந்தித்துள்ளன.
வரும் 20ஆம்தேதிக்குப் பின்னர் ஊரடங்கில் தளர்வுகள் இருக்கும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், பொருளாதாரத்தை மீட்கும் வகையிலும், தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதை சாத்தியமாக்கவும், ரிசர்வ் வங்கி 2ஆவது கட்டமாக நேற்று சில சலுகைகளை அறிவித்தது.
இது குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் நேற்று அளித்த பேட்டி வருமாறு: கரோனாபாதிப்புக்கு இடையே, ரிசர்வ் வங்கி நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. கரோனா வைரஸ்தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட அனைவருக்கும், குறிப்பாக நிதித்துறையில் உள்ளவர்களுக்கும் நன்றி. சில பகுதிகளில் பொருளாதார நிலைமை பாதிக்கப்பட்டுள்ளது. கடுமையான சூழ்நிலையிலும் அனைத்து வங்கிள் செயல்படுகின்றன. நாட்டின் அந்நிய செலாவணி 11.8 மாத இறக்குமதிக்கு போதுமானதாக உள்ளது. 47,650 கோடி டாலராக பராமரிக்கப்படுகிறது.
ரிசர்வ் வங்கி தற்போது மூன்று விஷயங்களில் முக்கியமாக கவனம் செலுத்த உள்ளது. போதுமான பணப்புழக்கத்தை பராமரித்தல் மற்றும் நடவடிக்கை எடுத்தல், நிதி அழுத்தத்தை எளிதாக்குதல், சந்தை களின் முறையான செயல்பாட்டை கண்காணித்தல், வங்கிகளின் கடன் வழங்குதலை எளிதாக்குதல் மற்றும் ஊக்குவித்தல்ஆகியனமுக்கிய அம்சங்களாகும்.
இதன் அடிப்படையில், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உதவும் வகையில் நபார்டு, சிறு நிறுவனங்கள் மேம்பாட்டு வங்கி, தேசிய வீட்டு வசதி வங்கி உள்ளிட்டவை மூலமாக வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு 50 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும். இந்த நீண்ட கால ரெப்போ திட்ட சிறப்பு நிதியில் நபார்டு 25,000கோடி, சிறுநிறுவனங்கள் மேம்பாட்டு வங்கி 15,000 கோடி, தேசிய வீட்டு வசதி வங்கிக்கு 10,000 கோடி என வழங்கப்படும்.
வங்கிகள் தங்களிடம் உள்ள நிதியில் சுமார் 6.9 லட்சம் கோடியை ரிசர்வ் வங்கியில் இருப்பு வைத் துள்ளன. எனவே, வங்கிகள் கடன் வழங்குவதை ஊக்குவிக்கும் வகையில் ரிவர்ஸ் ரெப்போ வீதம் 4 சதவீதத்திலிருந்து 3.75 சதவீதமாககுறைக்கப்படுகிறது.
ரெப்போவட்டியில் மாற்றமில்லை. இதுபோல், வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு வங்கிகள் வழங்க 50 ஆயிரம்கோடி, நீண்டகாலரெப்போ அடிப்படையில் வழங்கப்படும். இந்த பலனை வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் சிறு பைனான்ஸ் நிறுவனங் களுக்கு வங்கிகள் வழங்க வேண்டும்.ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள கடன்களுக்கு 3 மாத கடன் தவணைசலுகைவழங்கப்பட்டு உள்ளதால், இவற்றின் மீது 90 நாள் வராக்கடன் விதிகள் பொருந்தாது. மூலதன நிதியை வங்கிகள் இருப்பு வைக்க வேண்டும் என்பதால், நடப்பு நிதியாண்டில் வங்கிகள் டிவிடெண்ட் செலுத்த தேவையில்லை. ஊரடங்கு இருந்தாலும், வங்கிகள் செயல்படுகின்றன. வங்கிகள் நிதி நெருக்கடியில் இருந்து மீளவும், கடன் வழங்குவதை அதிகரிக்கவும் கருத்தில்கொண்டு இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
மாநில அரசுகளுக்கான ஓவர் டிராப்ட் அதிகரிப்பு
சக்திகாந்த தாஸ் தனது பேட்டியில் மேலும் கூறுகையில், "ஓவர் டிராப்ட் வசதியை பயன்படுத்தி மாநிலங்கள் 30 சதவீத கடன்களை பெற்று வந்தன. தற்போது மாநிலங்களின் நிதி நிலை மோசமாக உள்ளதால், இந்த வரம்பு 60 சதவீதமாக உயர்த்தப் படுகிறது. இது வரும் செப்டம்பர் 30 வரை அமலில் இருக்கும்,” என்றார்.
காங்கிரஸ் அதிருப்தி
ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு குறித்து காங்கிரஸ் அதிருப்தி தெரிவித்துள்ளது. “ரிசர்வ் வங்கி வெளி யிட்ட அறிவிப்புகள், கரோனாவால் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் உதவாது.கரோனா ஊரடங்கால்பாதிக்கப்பட்டுள்ள ஏழைமக்கள் பயன்பெறும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்,” என மூத்த காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான் தெரிவித்தார்.
No comments:
Post a Comment