நவீன் பட்நாயக்
புவனேஷ்வர், ஏப்.22 கரோனாவால் உயிரிழக்கும் மருத்துவர்களின் உடல் அரசு மரியாதையுடன் அடக் கம் செய்யப்படும் என்று ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக்தெரிவித்துள்ளார்.
கரோனாவைரஸ்பாதிப்பு காரணமாக இந்தியா முழு வதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக் கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்தை கடந்துள்ளது.
கரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 603 ஆக உயர்ந்துள்ளது. ரானா தடுப்பு நடவடிக்கையில் உயிரிழக்கும் டாக்டர்கள் உள் மருந்து ளிட்ட சுகாதார பணியாளர்களின் உடல் அரசு மரியா தையுடன் அடக்கம் செய்யப்படும் என ஒடிசா முதல் அமைச்சர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, நவீன் பட்நாயக் இன்று வீடியோ மூலம் வெளியிட்ட அறிக் கையில், மருத்துவபணியாளர் களுக்கு இடையூறு ஏற்படுத் தும் வகையிலே, அவர்களின் பணியை அவமதிக்கும் வகை யிலே யாரேனும் செயல் பட்டால், தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கரோனா வைரசுக்கு எதி ராகப் போராடும் சுகாதார பணியாளர்கள் மற்றும் உத வியாக உள்ளவர்கள் இறக்க நேரிட்டால் அவர்களது குடும்பத்தினருக்கு ரூ. 50 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும்.
அவர்களின் உடல் அரசுமரியாதையுடன் அடக் கம்செய்யப்படும். அவர்களின் ஈடு இணையற்ற தியாகத்தை கௌரவிக்கும் வகையில், அவர்களுக்கு விருதுகள் அளிக்கப்படும் என்று தெரி வித்துள்ளார்.
No comments:
Post a Comment