உ.பி.யில் என்னதான் நடக்குது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 20, 2020

உ.பி.யில் என்னதான் நடக்குது

கிருமிநாசினியைக் குடிக்க வைத்து


துப்புரவுத் தொழிலாளியைக் கொன்ற கும்பல்


 


லக்னோ, ஏப்.20 உத்தரப்பிரதேச மாநிலத்தில் கிருமிநாசினியைக் குடிக்க வைத்து துப்புரவுத் தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள் ளது.


உத்தரப்பிரதேச மாநிலத்தில் கரோனா தடுப்புப் பணியில் உள்ள வர்களை தாக்குபவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நட வடிக்கை எடுக்கப்படும் என்று அந்த மாநில முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத் உத்தரவிட்டபோதிலும், அங்கு சுகாதார பணியாளர்கள் தாக்கப்படும் சம்பவம் தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கிறது.


இந்தநிலையில் அங்குள்ள ராம்பூர் மாவட்டத்தில் நடந்த கொடூர சம் பவம் ஒன்று தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.


அங்குள்ள மோதிபுரா கிராமத்தில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் விதமாக கடந்த 14- ஆம் தேதி கிருமி நாசினி தெளிக்கும் பணியில் துப் புரவுத் தொழிலாளியான குன்வார் பால் ஈடுபட்டுள்ளார். அவர் எந்திரம் மூலம் கிருமி நாசினி திரவத்தைத் தெளித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அங்கு நின்று கொண்டிருந்த இந்திரபால் என்ப வரின் காலில் மருந்து பட்டதாகத் தெரிகிறது.


இதனால் ஆத்திரம் அடைந்த இந் திரபால் மற்றும் அவருடைய ஆதர வாளர்கள் சேர்ந்து எந்திரத்தை பறித்து, அதில் இருந்த குழாயை குன் வார் பால் வாயில் திணித்து கட்டா யப்படுத்திக் கிருமிநாசினி திரவத்தைக் குடிக்க வைத்துள்ளனர். இதையடுத்து மொராதாபாத்தில் உள்ள மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட குன் வார் பால், 3 நாள் அளிக்கப்பட்ட தொடர் சிகிச்சை பலனளிக்காமல் கடந்த 17- ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.


இதுகுறித்து குன்வார் பாலின் சகோதரர் அளித்த புகாரின் பேரில் இந்திரபால் உள்பட 5 பேர் கொண்ட கும்பல் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வரு கின்றனர். இதுவரை யாரையும் கைது செய்யவில்லை என தெரிவித்த காவல் துறையினர், உடற்கூறு அறிக்கை கிடைத்த பின்பு மேற்கொண்டு நட வடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.


No comments:

Post a Comment