* ஊரடங்கு காரணமாக மருந்துக் கடைகளில் மருந்துகள் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படும்; எனவே, காலாவதி தேதியைப் பார்த்து வாங்குங்கள் என்கிறார் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா சத்யராஜ்.
* சிறு குறு தொழில்கள் நசிவை சீர்செய்ய மத்திய அரசு ஒரு லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கவேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா கருத்து.
* கோடீஸ்வரர்களுக்கு 40 விழுக்காடு வரி மூலம் ரூ.18 ஆயிரம் கோடி திரட்ட யோசனை.
* மருத்துவ உபகரணங்கள் வாங்கிட ரூ.1000 கோடியை உடனே வழங்கிட வேண்டும் என்று பிரதமரிடம் தமிழ்நாடு முதலமைச்சர் கோரிக்கை.
* சீனாவிடமிருந்து பெறப்பட்ட அனைத்து ‘ரேபிட் டெஸ்ட் கிட்' பரிசோதனைக் கருவிகளையும் திருப்பி அனுப்புமாறு அனைத்து மாநில அரசுகளையும் இந்திய மருத்துவக் கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.
* ஊரடங்கு காலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக நடத்தப்பட்ட குற்றங்கள் தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கை 674. சிறுவர், சிறுமிகள் தொடர்பான அவசரத் தொலைப்பேசி எண்: 1091.
* துக்க நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொள்ளலாம்.
* உலகில் உள்ள காசநோய் (டி.பி.) க்கு ஆளானோர் ஒரு கோடி. இதில் இந்தியர்கள் மட்டும் 27 லட்சம் பேர். ஒவ்வொரு நாளும் காநோயால் உயிரிழப்பு 1205 பேர்.
* இந்தியா முழுவதும் கரோனா வைரஸ் தடுப்புப் பணிகளில் ஈடுபடுவோர் 1.2 கோடி பேர்.
* திருமணத்துக்குச் சேர்த்து வைத்த ரூபாய் 2 லட்சத்தை கரோனா நிவாரணத்துக்காக வழங்கினார் மணமகன் - இது நடந்தது தெலங்கானா மாநிலம் அய்தராபாத்தில்.
* இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களில் கரோனா தொற்று இல்லை.
* இந்தியாவில் கடந்த 14 நாட்களாக 85 மாவட்டங்களில் கரோனா தொற்று இல்லை.
* சென்னை கோயம்பேட்டில் சலூன்காரர் உள்பட மூவர் கரோனா தொற்றுக்கு ஆட்பட்டதால், சந்தை மூடப்படும் நிலை.
* முகக் கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் ரூ.8 லட்சம் - ஜெர்மனியில்.
No comments:
Post a Comment