மும்பை பங்குச் சந்தையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மொத்தமாக 13 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீட்டாளர்கள் இழப்பைச் சந்தித்துள்ளனர்.
மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு இரண்டாவது முறையாகப் பதவியேற்றது தொடங்கி, இந்திய பொரு ளாதாரம் கடும் சரிவைச் சந்தித்து வருகிறது. மேலும், பல பன்னாட்டு நிறுவனங்கள் பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 15 மாதங்களில் இல்லாத அளவுக்கு மிகக் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. அதேபோல், இந்தியப் பங்குச்சந்தைகள் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவுடன் இருக்கின்றன.
இந்நிலையில், கடந்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதத்தில் இருந்து 4.7 சத வீதமாக மட்டுமே உயர்ந்துள்ளது. இதனால் பொரு ளாதாரம் மீண்டு எழும், நிச்சயம் பா.ஜ.க ஆட்சியில் 5 ட்ரில்லியன் பொருளாதாரமாக உயரும் என வழக்கம் போல தங்கள் வசனத்தைப் பேச ஆரம்பித்தார்கள். அவர்களின் பொய்ப் பிரச்சாரம் நீடிக்காத வகையில், இந்திய பங்குச்சந்தைகளில் தொடர்ந்து வரலாறு காணாத சரிவு ஏற்பட்டு வருகிறது. தற்போது வெளிவந்துள்ள தகவலின் படி, மும்பை பங்குச் சந்தையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மொத்தமாக 13 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பை முதலீட்டாளர்கள் சந்தித்துள்ளனர்.
சென்செக்ஸ் கடந்த பிப்ரவரி 13 அன்று 41,709 புள்ளிகள் என்ற உச்சத்தில் இருந்தது. ஆனால், அதற்குப் பிந்தைய 14 நாட்களில் சுமார் 3,300 புள்ளிகள் அளவிற்கு சரிந்து முதலீட்டாளர்களை அதிர்ச்சிக் குள்ளாக்கியது.
இந்நிலையில் புதன்கிழமையன்று வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 38,409 புள்ளிகளில் நிலைபெற்றது. இதேபோல தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி, புதனன்று மேலும் 52 புள்ளிகள் சரிந்து, 11,251 புள்ளிகளுக்குப் போனது.
இதனால்தான் கடந்த ஒருவாரத்தில் மட்டும் முதலீட் டாளர்கள் 13 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்தியாவில் பரவும் கரோனா அச்சம் காரணமாக மேலும் பங்குச் சந்தை வீழ்ச்சி அடையும், முதலீடுகளும் குறையும் எனப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக் கின்றனர். அதே போல் இந்திய ரூபாய் மதிப்பானது கடந்த 15 மாதங்களில் இல்லாத அளவுக்கு கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. குறிப்பாக, தொடர்ந்து பெரும் இழப்பைச் சந்தித்துவரும் பங்குச் சந்தைகள், ஜி.டி.பி. வீழ்ச்சி காரணமாக, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் மிகக் கடுமையாக வீழ்ச்சி கண்டுள்ளது. தற்போது 15 மாதங்களுக்குப் பிறகு 73 ரூபாயைத் தாண்டியுள்ளது. அதுமட்டுமின்றி, சீன நாட்டின் யுவான் மதிப்பும் வீழ்ச்சியைக் கண்டுள்ளது. அதனால் இந்திய பங்குச்சந்தையும் பாதிப்பை சந்திக்கிறது. இதற்கு அந்நிய முதலீடுகள் இந்திய பங்குச் சந்தையிலிருந்து வெளியேறியதே ரூபாய் மதிப்பு சரிவுக்கு முக்கியக் காரணம் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
கச்சா எண்ணெய் விலையேற்றமும் ரூபாய் மதிப்பு சரிவில் தாக்கத்தை உருவாக்கியுள்ளது. ஆனால் இந்தியாவில் பொருளாதாரச் சிக்கல் இல்லை என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பா.ஜ.க-வினர் கூறிவருகின்றனர்.
பொருளாதாரத்தின் இந்த வீழ்ச்சியைத் திசை திருப்பும் வகையில் வெவ்வேறு பிரச்சினைகளைக் கொண்டு வந்து திணித்து அரசியல் செப்பிடு வித்தை செய்வதில் பா.ஜ.க.வினரை அடித்துக் கொள்ள யாரும் இல்லை.
ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த நிலை யிலேயே, அங்கு மதவாத அரசியல் நடத்தி, மக்கள் நலத் திட்டங்களைப் பின்னுக்குத் தள்ளிய நரேந்திர மோடிதான் இந்தியாவின் பிரதமராக உள்ளார்.
இவரிடம் பெரிய எதிர்பார்ப்பை வைப்பது தவறு என்பது கடந்த ஆறு ஆண்டு கால நிரூபணமாகும்.
No comments:
Post a Comment