குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பான வழக்கில், நீதிமன்றத்திற்கு
உதவுவதற்காக தங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் உச்சநீதிமன்றத்தில் மனு
புதுடில்லி, மார்ச் 4 குடியுரிமைத் திருத்தச் சட்டத் துக்கு எதிராக நாடுமுழுவதும் கடும் எதிர்ப் பலை ஏற்பட்டு, போராட்டங்கள் வெடித் துள்ளன. டில்லியில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. வடகிழக்கு மாநிலங்களில் தொடங்கிய எதிர்ப்புப் போராட்டங்களின் தொடர்ச்சியாக டில்லியில் அமைதி வழியில் போராட்டம் நடந்துவந்த நிலையில், சிஏஏ ஆதரவு என்கிற பெயரில் பாஜக, ஆர்எஸ்எஸ் இந்துத்துவாவாதிகளால் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. கலவரத்தில் 47 பேர் உயிரிழந்தனர். 200 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
மத்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட் டத்துக்கு எதிராக போராட்டங்களும், ஆர்ப் பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இதில் பல இடங்களில் வன்முறை வெடித்து ஏராளமானோர் உயிரிழந்தனர்.
நாட்டில் பரவலாக இதுபோன்ற போராட் டங்கள் நடைபெற்று வந்த போதிலும், இந்த சட்டத்தை திரும்பப் பெறும் பேச்சுக்கே இட மில்லை என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
இந்நிலையில், இப்பிரச்சினையில் நீதிமன் றத்துக்கு உதவத் தயாராக இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில், அய்க்கிய நாடுகள் அவையின் மனித உரிமை ஆணையம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக அய்.நா. மனித உரிமை ஆணையர் மிச்செல் பேச்லெட் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பன்னாட்டளவில் மிகப்பெரிய மற்றும் அனைத்து நாடுகளுக்கும் பொதுவானதாக கரு தப்படும் அய்.நா. அமைப்பானது, இந்தியா வில் உள்ள ஒரு சட்டத்துக்கு எதிராக இங்குள்ள உச்சநீதிமன்றத்தையே நாடியிருப்பது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதற்கு முன்பாக, இந்தியாவின் குடியுரி மைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மிச்செல் பேச்லெட் பலமுறை கருத்து தெரிவித்துள்ளார். அதேபோல, அய்.நா. பொதுச்செயலாளர் அன் டோனியா குட் டெரஸும் இந்த சட்டத்தை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
‘குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பான வழக்கில், நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக தங் களுக்கு அனுமதி வழங்க வேண்டும்' என்று உச்சநீதிமன்றத்தில் அய்நா சார்பில் அளிக்கப் பட்ட மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனு விவரம் வருமாறு:
அய்.நா. மனித உரிமைகள் ஆணையம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்ட மனுவில், ‘மத ரீதியாகத் துன்புறுத்தலுக்கு உள்ளான குறிப்பிட்ட சில சமூகத்தைச் சேர்ந்த நபர்கள் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின்மூலம் பயனடைவதை அய்.நா. மனித உரிமைகள் ஆணையம் வரவேற்கிறது. அதேவேளையில் மத ரீதியில் துன்புறுத்தலுக்கு உள்ளான அக மதியா, ஷியா உள்ளிட்ட முஸ்லிம் பிரிவைச் சேர்ந்தவர்கள் குடியுரிமைத் திருத்தச் சட்ட வரம்பில் சேர்க்கப்படவில்லை.
குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பான விவகாரத்தில் பன்னாட்டு மனித உரிமை சட்டங் களுக்கு உச்சநீதிமன்றம் முக்கியத்துவம் அளிக்கவேண்டும். இந்த விவகாரத்தில் சர்வ தேச மனித உரிமைகள் சட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றத்துக்கு உதவி புரிய அய்.நா. மனித உரிமைகள் ஆணையம் விரும்புகிறது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
குடியுரிமைத் திருத்தச் சட்டம்-2019
பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ் தான் போன்ற நாடுகளில் இருந்து வந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாதவர் களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கடந்த டிசம்பர் 11 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது இந்த சட்டத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் தொடங்கிய போராட்டம்
இந்த சட்டத்துக்கு எதிராக முதலில் வட கிழக்கு மாநிலங்களில் வெடித்த போராட்டம், பின்னர் மேற்கு வங்காளம், டில்லி, சென்னை என பிற பகுதிகளுக்கும் பரவி வருகிறது. டில்லியில் கடந்த சில நாட்களாக பெரும் வன்முறை நடந்து வந்தது. தற்போதுதான் படிப்படியாக அமைதி நிலைக்கு திரும்பி உள்ளது. சென்னை வண்ணையில் கடந்த 20 நாள்களாக போராட்டம் தொடர்ந்து வருகிறது.
வன்முறைகள் உயிரிழப்புகள்
குடியுரிமைத் திருத்தச் சட்டம் நிறைவேற் றப்பட்ட 82 நாட்களில், அதுதொடர்பான பல்வேறு சம்பவங்களில் 75 பேர் கொல்லப் பட்டுள்ளனர். நாடுமுழுவதும் வெடித்த வன் முறைகளில் அசாமில் 6 பேரும், உத்தரப்பிர தேசத்தில் 19 பேரும், கருநாடகத்தில் 2 பேரும், டில்லி கலவரங்களில் 48பேரும் கொல்லப் பட்டுள்ளனர்.
இதனிடையே, குடியுரிமைத் திருத்தச் சட் டத்தை நடைமுறைப்படுத்தும் விதிகளை மத்திய உள்துறை அமைச்சகம் இன்னும் அறிவிக்கை செய்யவில்லை. விதிகள் வகுக் கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள உள்துறை அமைச்சக வட்டாரங்கள், எப்போது அறி விக்கை செய்யப்படும் என்பதற்கான காலக் கெடு எதையும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையிலேயே குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக நீதிமன்றத்துக்கு உதவு வதற்கு தங்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு, அய்.நா. மனித உரிமைகள் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment