சென்னை. மார்ச் 6- பெரியார், அண்ணா, கலைஞர் பகுத் தறிவு பாசறையின் 5 ஆம் ஆண்டு தொடக்கவிழாவில் கலந்துகொண்டு வழக்குரை ஞர் அ.அருள்மொழி சிறப்பு ரையாற்றினார்.
ஆவடியில் உள்ள கொரட் டூர் பெரியார், அண்ணா, கலைஞர் பகுத்தறிவு பாசறை யின் 222 ஆவது வார நிகழ்ச் சியாக ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது. இந்நிகழ்வு பாடியிலுள்ள யாதவா தெருவில் 29-.2.2020, சனிக்கிழமை அன்று மாலை 6 மணியளவில் நடைபெற்றது. இதில் பாச றையின் ஒருங்கிணைப்பாளர் இரா.கோபால் தலைமை யேற்று உரையாற்றினார். பகுத்தறிவாளர் கழகத்தோழர் பா.முத்தழகு அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
கழகத்தின் மாநில அமைப் புச் செயலாளர் வி.பன்னீர் செல்வம், மாவட்டத் தலைவர் பா.தென்னரசு, மாவட்ட இளைஞரணியின் தலைவர் கார்வேந்தன் ஆகியோர் முன் னிலை வகித்து உரையாற்றி னர். மண்டலச் செயலாளர் தே.செ.கோபால் முன்னிலை வகித்துச் சிறப்பித்தார்.
திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி அவர்கள் தனது உரையில், தி.மு.க.வின் கிளைக்கழகமாக செயல்படும் பகுத்தறிவு பாசறையையும், அதை வழிநடத்தும் இரா. கோபால் அவர்களையும் பாராட்டினார். தொடர்ந்து அவர், நீட் தேர்வில் நடை பெறும் குளறுபடிகளையும், மோசடிகளையும் மக்களுக்கு புரியும்படி சுட்டிக்காட்டி னார். அதேபோல, தமிழ்நாட் டின் பல்வேறு துறைகளில் பி.ஜே.பி.யின் கொடும் கரங் கள் நீண்டு, மொழி தெரியாத வடநாட்டாரை பணியமர்த்தி வரும் கொடுமையை எடுத்து ரைத்தார். இன்னும் பலவகை களில் மத்திய, மாநில அரசுக ளின் முகத்திரையை கிழிக்கும் வண்ணம் பல்வேறு தகவல் களை எடுத்துரைத்து, மறை முகமாக தமிழ்நாட்டில் பி. ஜே.பி ஆட்சிதான் நடைபெறு கிறது என்று சொல்லி, அதை மாற்றவேண்டும் என்று கூறி உரையை நிறைவு செய்தார்.
நிகழ்ச்சியில் பகுத்தறிவு பாசறையின் பெரியார் பிஞ்சுகள், பகலவன், ஆவடி மாவட் டச் செயலாளர் இளவரசன், அமைப்பாளர் உடுமலை வடி வேல், துணைச் செயலாளர் சோபன் பாபு, வை. கலைய ரசன், கலைமணி, பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி, முகப்பேர் செல்வி, முரளி, பெரியார் மாணாக்கன், பொதுக்குழு உறுப்பினர் பூவை செல்வி, வெங்கடேசன், மணிமாறன், ஆவடி நகரச் செயலாளர் முருகன், அம்பத்தூர் சிவக் குமார், சி.ஜெயந்தி, பகுத்தறிவு, சந்திரபிரபு, தமிழ்மணி, பெரியார் பிஞ்சுகள், நன்னன், இனியன், மாணவர் கழகத் தோழர்கள் வ.ம.வேலவன், தொண்டறம், பிரவீன் ஆகி யோர் கலந்துகொண்டு சிறப் பித்தனர். இறுதியாக பெரி யார் பவுல் நன்றியுரை கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment