அடிபணிந்தது போதும் - தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கட்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 6, 2020

அடிபணிந்தது போதும் - தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கட்டும்









சென்னை பல்கலைக் கழகத் துணைவேந்தர் பதவிக்கான ஆய்வுக் குழுவுக்கு டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத் துணைவேந்தரை, தமிழ்நாடு ஆளுநர் அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது - தமிழ்நாடு அரசு உடனே இதனை எதிர்க்கவேண்டும் என்று   திராவிடர் கழகத் தலைவர் தமிழர்  தலைவர் ஆசிரியர்  கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள  கண்டன அறிக்கை வருமாறு:


வரலாற்றுப் பெருமை வாய்ந்த சென்னை பல்கலைக் கழகமும்கூட வெளி மாநிலத்தவருக்கோ அல்லது பார்ப்பனர் களுக்கோ தலைமைப் பதவியாகிய துணைவேந்தர் பதவி தாரை வார்க்கப்பட ஏற்பாடு மும்முரமாக நடைபெறுகிறதோ என்ற அச்சம் கல்வியாளர்களிடையே, சமூகநல ஆர்வலர்களிடையே பரவலாக ஏற்பட்டுள்ளது.


சென்னை பல்கலைக் கழகத் துணைவேந்தர் நியமன


 


ஆய்வுக் குழுவில் அத்துமீறல்


இதற்குக் காரணம், சென்னை பல்கலைக் கழகத் துணைவேந்தரை தேர்வு செய்யும் ஆய்வுக் குழுவில் அமைப்பாளராக ஜே.என்.யூ. என்று அழைக்கப்படும் டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத் துணைவேந்தர் ஜெகதீஷ்குமாரை தமிழக ஆளுநர் நியமித்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது ஆகும்! அவர்மீது ஏற்கெனவே புகார்கள் கூறப்பட்டுள்ளன என்பது கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.


தமிழ்நாட்டில் கல்வியாளர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டுவிட்டதோ!


தமிழ்நாட்டு ஆளுநர் பார்ப்பனர் என்ப தாலும், ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர் என்ப தாலும்,  நாளும் கல்விக் கூடங்களில் தமி ழர்கள் அல்லாதவர்களால் நிரப்பப்பட்டு வருகிறது!


தமிழக அரசின் சரணாகதி!


இதற்கு மூலாதாரமாக, உடந்தையாக இருப்பது தமிழக அ.தி.மு.க. முதல மைச்சரும், உயர்கல்வித் துறை அமைச் சரும் ஆகும்!


துணைவேந்தர்களின் தேர்வும், நிய மனமும் ஆளுநர் பெயரால் வந்தாலும், உண்மையில் தமிழக அரசால், அதன் முதல்வரால், அமைச்சரவையால் நியமிக் கப்படும் முறை நீண்ட கால நடை முறையாகும்!


இதுவரை இருந்துவரும் நடைமுறைகள் என்ன?


திராவிட இயக்க ஆட்சிக்கு முன்பே காங்கிரஸ், காமராசர் ஆட்சியிலும், அறிஞர் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெய லலிதா முதலிய முதல்வர்களின் ஆட்சியிலும்கூட துணைவேந்தர்கள் தேடல் குழு நியமனத்தில் அரசு நியமனம் முக்கிய மானதாகும். இறுதியில் ஒப்புதல் நியமனமும் முதல்வருடையது என்ற மாநில அரசின் அதிகாரத்தை, இந்த ஆளுநர் திரு.பன் வாரிலால் புரோகித் வந்தவுடன், ‘‘தாரை'' வார்த்துவிட்டது தற்போதுள்ள எடப்பாடி யார் தலைமையில் அமைந்த அரசு.


அதனைக் கண்டித்து தமிழ்நாட்டுத் தலைவர்கள் பலரும், எதிர்க்கட்சித் தலை வரும், நம்மைப் போன்றோரும் கண்டனக் குரல் எழுப்பியுள்ளதை சற்றும் புரிந்து கொள்ளாமல், ஆளுநர் செய்ததை நியா யப்படுத்துவதுபோல சில அமைச்சர்கள் பேசி, தங்கள் அரசின் தலையில் கொள்ளிக்கட்டையை எடுத்து தாங்களே சொரிந்து கொள்வதின் வேதனை, விபரீதம் அண்ணா பல்கலைக் கழகத்தில் மற்ற பல்கலைக் கழகத்தில் தொடங்கி, சென்னை பல்கலைக் கழகத்தையும் ‘‘பதம்'' பார்க்க அதன் அதிகார நச்சுப்பற்கள் துடிக்கின்றன.


தமிழக அரசு எதிர்க்கவேண்டும்


கல்வியாளர்களே, பெற்றோர்களே, மாணவர்களே உங்கள் கதி இதுதானா? அந்தோ பஞ்சம சூத்திர இனமே! ‘‘உன் நிலை நாதியற்றதா?''


சென்னை பல்கலைக் கழகம் தொடர் பான ஆளுநர் முடிவுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கவேண்டியது மிகவும் அவசியமல்லவா?


கி.வீரமணி


 


தலைவர்,


 


திராவிடர் கழகம்


சென்னை


6.3.2020









No comments:

Post a Comment