வேடிக்கை பார்க்கும் காவல்துறை
புதுடில்லி, பிப்.29 தலைநகர் டில்லியில் இருந்து 5 நிமிடம் காவல்துறையினரை அகற்றினால், அங்குள்ள முஸ்லிம்களை கொன்று குவித்து விடு வோம் என்று ஆர்எஸ்எஸ் துணை அமைப்பான, இந்து ஆர்மி அமைப் பின் தலைவர் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார். இவர் பேசும் வீடியோ வைரலாகி வரும் நிலையில், அவர்மீது காவல்துறை இதுவரை நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகிறது.
டில்லியில் ஏற்பட்ட வன்முறை உலக நாடுகளையே அதிர்ச்சிக்குள் ளாக்கி உள்ளது. இந்த வன்முறையை தூண்டும் வகையில் பேசிய பாஜக தலைவர்கள்மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர், டில்லி காவல்துறையிடம், பாஜக தலைவர்கள் பேசிய வன்முறை பேச்சு தொடர்பான வீடியோவை போட்டுக் காண்பித்து, அவர்கள்மீது 24 மணி நேரத்திற்குள் எஃப்அய்ஆர் பதிய வேண்டும் என உத்தரவிட்டும், செவி மடுக்காத மத்தியஅரசு, வீடியோவை ஆய்வு செய்துதான் நடவடிக்கை எடுக்க முடியும் என்று கூறியதோடு மட்டுமின்றி, அந்த நீதிபதியையே இரவோடு இரவாக இட மாற்றம் செய்து விட்டது.
இந்த நிலையில், இந்துத்துவா அமைப்பான ஆர்எஸ்எஸ்-சின் கிளை அமைப்பில் ஒன்றான, லக்னோவைச் சேர்ந்த இந்து ஆர்மி என்ற அமைப்பின் தலைவர் மணீஷ் யாதவ் என்பவர் முஸ்லிம்களுக்கு பகிரங்கமாக மிரட் டல் விடுத்து வீடியோ வெளியிட்டு உள்ளார்.
அதில், டில்லியில் இருந்து 5 நிமிடம் காவல்துறையினரை அகற்றி னால், அனைத்து முஸ்லிம்களையும் கொன்று குவித்து இந்துராஷ்டிரம் அமைப்போம் என்று கர்ஜித்து உள்ளார். இவரது பேச்சு வன்முறையை தூண்டும் வகையில் உள்ள நிலையில், அவர்மீது காவல்துறை இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் கண்மூடி வேடிக்கை பார்த்துக்கொண் டிருக்கிறது... ஒருவேளை நாளை பிரச் சினை ஏற்பட்டு நீதிமன்றம் கேள்வி எழுப்பினால், இந்த வீடியோவையும் நாங்கள் பார்க்கவில்லை என அமித்ஷா வின் டில்லி காவல்துறை நீதிமன்றத்தில் சொல்லக் காத்திருக்கிறார்களோ என் னவோ! ஏற்கெனவே இந்து ஆர்மி என்ற பெயரில் அதன் நிறுவனர் மணீஷ் வித்யாயக்கின் (மணீஷ் யாதவ்) புகைப்படத்துடன், “ஜாகோ இந்து ஜாகோ கைஸ் கஹெய்ன் கி தேஷ் ஆசாத் அய்” என்று வாசகங்கள் இடம்பெற்றிருந்த சுவரொட்டிகள் ஒட் டப்பட்டிருந்தன. இது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
இந்து ஆர்மி என்ற அமைப்பை நிறுவியுள்ள மணீஷ் யாதவ் ஏற்கெ னவே சமாஜ்வாடி கட்சியின் உறுப் பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment