நைஹாத்தி, டிச.29 நான் உயி ரோடு இருக்கும் வரை குடி யுரிமை திருத்தச் சட்டத்தை மேற்கு வங்கத்தில் செயல்படுத்த விட மாட்டேன்' என அந்த மாநில முதல் வர் மம்தா பானர்ஜி தெ ரிவித்தார்.
மேற்குவங்க மாநிலம், வடக்கு பார்கனாஸ் மாவட்டம், நைஹாத்தியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் வெள்ளிக்கிழமை அவர் பேசியதாவது:-
'சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தை நான் ஆதரிக்கிறேன். 18 வயது பூர்த்தியானதும் ஒரு அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கும் உரிமையை அரசமைப்புச் சட்டம் அவர்களுக்கு வழங்கும்போது, அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்க அவர்களுக்கு குடியுரிமை திருத்தச் சட்டம் உரிமை இல்லையா?
நான் உயிருடன் இருக்கும் வரை குடியுரிமைதிருத்தச் சட்டத்தைமேற்கு வங்கத்தில் செயல்படுத்த விடமாட்டேன்.நாட்டு மக்களின் உரிமைகளை யாரும் பறித்து விடமுடியாது.
யாரும் நாட்டைவிட்டு அல்லது மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டியதில்லை. மேற்குவங்கத்தில் எந்த தடுப்புக்காவல் மையமும் அமைக்கப்பட மாட்டாது.
இந்த கடுமையான சட்டத்துக்கு எதிராக மாணவர்கள் ஏன் போராட்டங்களை நடத்தி எதிர்ப்புகளை தெரிவிக்கக்கூடாது? எதிர்ப்பு தெரிவிக்கும் மாணவர்களுக்குஎதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
மேலும் அவர்களை பல்கலைக் கழகங்களிலிருந்து இடைநீக்கம் செய்வது போன்ற நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
ஆரம்பத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டை நிறைவேற்ற பா.ஜ.க. முன்வந்த போது, அவர்களின் நோக்கத்தை நாங்கள் உணரவில்லை.
ஆனால், நாட்டின் குடிமக்களை தனிமைப் படுத்துவதுடன் இது தொடர்புடையது என்பதை அறிந்தபோது, மேற்குவங்கத்தில் அதனை நிறுத்தி விட்டோம். மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் எந்தச் செயலையும் நாங்கள் செய்ய மாட்டோம்.
பிற்படுத்தப்பட்ட ஜாதி சமூகங்களிடையே பிளவுகளை உருவாக்க மத்திய அரசு முயற்சிக்கிறது.
மேற்கு வங்கத்தில் 94 அகதிகள் முகாம்களுக்கு அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இருப்பினும், தனியார் மற்றும் மத்திய அரசு நிலங்களில் உள்ள அனைத்து அகதிகள் முகாம்களுக்கும் அங்கீகாரம் வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
வங்க மொழி பேசுபவர்களையும், மற்ற மொழி பேசுபவர்களையும் பிரிக்க மத்திய அரசு விரும்புகிறது. அவர்கள் இந்து, முஸ்லிம், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பவுத்தர்களைப்பிரிக்க விரும்பு கிறார்கள். நாங்கள் அனுமதிக்கமாட்டோம்' என்று பேசினார்.
No comments:
Post a Comment