கொல்கத்தா, டிச.24 குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும் பப் பெறா விட்டால் கொல்கத்தா விமான நிலையத் தி லிருந்து வெளி யே வர அமித் ஷாவை அனு மதிக்க மாட்டோம் என்று அந்த மாநில அமைச்சரும், மாநில ஜாமியத்- உலே மா-ஏ -ஹிந்த் அமைப்பின் தலைவருமான சித்திக்குல்லா சவுத்ரி தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து ஜாமியத்-உலே மா-ஏ -ஹிந்த் அமைப்பு சார்பில் கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை பேரணி நடைபெற்றது. இதில் பங்கேற்ற சித்திக்குல்லா சவுத்ரி பேசியதாவது:
-வன்முறை போராட்டங்களில் எங்களுக்கு நம்பிக்கையில்லை. அதே நேரத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் (என்.ஆர்.சி.) திரும்பப் பெறும் வரை எதிர்ப்போம். கொல்கத்தா உள்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இப்போது போராட்டங்கள் நடந்துவருகின்றன.
இதன் மூலம் பா.ஜ.க.வை மக்கள் நிராகரித்துவிட்டார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. 56 அங்குல மார்புடையவர் என்று பிரதமர் நரேந்திர மோடியை அவரது கட்சியினர் வர்ணித்தாலும், மக்கள் முன்னால் அவர் தலைவணங்கியே ஆக வேண்டும். பிரிவினைவாத, வெறுப்புணர்வு அரசியலை அவர் கடைப்பிடித்து வருகிறார்.
மக்களுடன் கலந்து பேசுவதில் அவர்களுக்கு நம்பிக்கையில்லை. மக்களிடம் வலுக்கட்டாயமாக எதையும் திணிக்க முடியாது. குடியுரிமைச் சட்டத்தை திரும்பப் பெறாவிட்டால் உள்துறை அமைச்சர் அமித்ஷா கொல்கத்தாவுக்கு வர முடியாது.
ஒரு லட்சம் மக்களைத் திரட்டி விமான நிலையத்தில் இருந்து வெளியே வரமுடியாத அளவுக்கு முற்றுகைப் போராட்டம் நடத்துவோம். அந்த சட்டத் திருத்தத்தை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.
ஜனநாயக நாட்டில் மக்களைவிட எதுவும் பெரிதல்ல என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளவேண்டும். ஜாமியத்-உலேமா-ஏ-ஹிந்த் அமைப்பு இங்கு அமைதியான ஒரு எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தியுள்ளது. யாரும் வன்முறையில் ஈடுபடக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடர்ந்து பேரணிகளை நடத்தி வரும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
குடியரிமைச் சட்டத்துக்கு எதிராக மேற்குவங்கத்தில் நடைபெறும் போராட்டங்களில் முஸ்லிம்களும், ஹிந்துகளும் கைகோத்து பங்கேற்று வருகின்றனர் என்றார் அவர்.
No comments:
Post a Comment