இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முதுபெரும் தொழிற்சங்க வாதியும், பலவிதமான மக்கள் உரிமைப் போராட்டங்களில் சிறை சென்ற கொள்கைப் போராளியும் ஆன தோழர் ஆர். நல்லக்கண்ணு அவர் களுக்கு இன்று 95 வயது என்கிறபோது, அம்முதியவரை - முதிர்ந்தவரை வாழ்த்தி, நூறாண்டு கடந்து நல்ல உடல் நலத்தோடு வாழ வேண்டும் என விரும்புகிறது திராவிடர் கழகம்.
எளிமை, இனிமை, இலட்சியப்பற்றோடு, கொண்ட கொள்கை - இலட்சியங்களுக்காக எவ்விலையினையும், எந்நேரத்திலும் தருவதற்குத் தயார் என்னும் தியாக சீலர் அவர்.
பல்லாண்டு நலமுடன் வாழ்ந்து, தொண்டறம் தொடர வாழ்த்துகிறோம்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
26.12.2019
No comments:
Post a Comment