சென்னை, டிச.23 தமிழகத்தில், 50 ஆயிரம் முகாம்களில், ஜனவரி, 19இல் குழந்தைகளுக்கு, போலியோ சொட்டு மருந்து வழங்க, சுகாதாரத் துறை திட்டமிட்டு உள்ளது.
இந்தியாவில், போலியோ ஒழிக்கப்பட்டு விட்டதால், தற்போது, ஒரே தவணை மட்டும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.வரும் ஆண்டுக்கான, தேசிய அளவிலான போலியோ சொட்டு மருந்து முகாம், ஜனவரி, 19இல் நடைபெறும் என, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது. தமிழகத்தில், இதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இது குறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில், 72 லட்சம் குழந்தைகளுக்கு, போலியோ சொட்டு மருந்து போட திட்டமிடப் பட்டுள்ளது.
இதற்காக, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் என, மக்கள் கூடும் இடங்களில், முகாம்கள் நடத்தப்பட உள்ளன. வழக்கமாக, 40 ஆயிரம் முகாம்கள் தான் அமைக்கப்படும். இம்முறை ஒரே தவணையாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுவதால், 50 ஆயிரம் முகாம்களில், குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போடப்படும். இதற்கான பணியில், இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட பணியாளர் கள் ஈடுபட உள்ளனர்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்
No comments:
Post a Comment