கிரிக்கெட் உலகில் சவ்ரவ் கங்குலியை அறியாதவர் யாரு மிலர். இப்பொழுது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) தலைவர் என்னும் பெரிய பொறுப்பில் உள்ளவர்.
அவரது மகள் சனாவின் பெயர் (வயது 18) இப்பொழுது அடிபடுகிறது. இதோ அவரின் குரல்!
"இந்தியாவின் தலைசிறந்த எழுத்தாளர் திரு.குஷ்வந்த் சிங் அவர்களின் 'The End of India' புத்தகத்தில் இருந்து சில வரிகளை அடிக்கோடிட்டு காட் டியிருக்கும்; அவரது முஸ்லிம் மக்களுக்கான ஆதரவுக்குரல் இங்கே குறிப்பிடத்தக்கது.
"நம்மில் இன்று முஸ்லிம் இல்லை, கிறித்தவரில்லை. ஆகவே, நமக்குப் பயமுமில்லை. நாம் இங்கே பாதுகாப்பாக இருக்கிறோம் என நினைத்துக் கொண்டிருப்போர் தெரிந்து கொள்ளுங்கள்! நாம் முட்டாள் களின் சொர்க்கத்தில் வாழ்ந்து - கொண்டிருக்கிறோம் என்பதை.
நாளை பெண்களுக்கு எதிராக அநியாயம் நடக்கலாம், இறைச்சி உண்ண தடை வரலாம், வருடாந்திர புனித யாத்திரைகள் போக தடை விதிக்கப்படலாம், ஆங்கில மருத்துவம் வேண்டாம், நாட்டு வைத்தியம் போதும் என நம்மை தடுத்துநிறுத்தலாம், அத்தனை ஏன்? 'டூத்பேஸ் டுக்கு'ப் பதிலாக பல்மஞ்சனத் தைத் தேய்க்கக் கட்டாயப்படுத் தலாம். ஹாய் ஹலோ சொல்லி கைகுலுக்க தடை விதித்து 'ஜெய் சிறீ ராம்' என கூறச் சொல்லி நிர்பந்திக்கப்படலாம். இங்கே நாம் பாதுகாப்பாக இல்லை என்பதை உணர்ந்து மதப்பாகுபாடு பார்க்கும் சட் டங்களை புறக்கணித்து இந்தி யாவை ஜீவனுள்ளதாக்குங்கள்".
- ஒரு பதினெட்டு வயது பெண்ணின் இந்த சமூகக் கவலை சார்ந்த கருத்துகள் உன் னிப்பாகக் கவனிக்கப்படத் தக்கவை.
இந்தியாவின் இன்றைய யதார்த்தமான - துல்லியமான படப்பிடிப்பு. மனிதனை மனித னாகப் பார் - அவன் சார்ந்த மதத்தைப் பார்க்காதே என்பது தான் மனிதம். மதம் என்பது ஒருவனின் உள் விவகாரம். அதைத் தோண்டி எடுத்து முகர்ந்து பார்ப்பது என்பது மிகவும் மோசமான மனநோய் - வெறி நோய்.
மதம் யானைக்குப் பிடிக் கும் - பார்த்திருக்கிறோம். அது மனிதனுக்குப் பிடித்தாலும் அதன் கோரப்பிடி எத்துணை விபரீதமானது என்பதை - பிஜேபி மத்தியில் ஆட்சி அதிகார லகானைப் பார்த்த பிறகு அன்றாடம் அறிகிறோம் - ஏன் அனுபவிக்கவும் செய் கிறோம்.
மதம் போல உண்ணும் பழக்கமும் ஒருவனுடைய தனிப்பட்ட விவகாரம். உ.பி.யில் என்ன நடந்தது?
முகம்மது அக்லாக் என்ற இஸ்லாமிய முதியவரின் வீட் டில் குளிர் சாதனப் பெட்டியில் (Fridge) இருந்தது மாட்டுக்கறி என்று கூறி காவி வெறி சங் பரிவார்கள் அந்த வீட்டுக்குள் புகுந்து, அந்த முதியவரை அடித்துக் கொன்றதை மறுக்க முடியுமா?
இதோடு கங்குலியின் மகள் சனாவின் படப்பிடிப்பைக் கொஞ்சம் அறிவுக் கண் கொண்டு அலசுங்கள் - அதன் சிறப்புப் புரியும்.
- மயிலாடன்
No comments:
Post a Comment