சென்னை, டிச.29 தமிழ கத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தலில், இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு நடக்கும் இடங்களில், நேற்று மாலை யுடன் பிரச்சாரம் நிறை வடைந்தது; நாளை, ஓட்டுப் பதிவு நடக்க உள்ளது.
தமிழகத்தில், 27 மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல், இரண்டு கட்டமாக நடத்தப் படுகிறது. முதல் கட்ட தேர்தல், 27ஆம் தேதி நடந்தது. இந்த தேர்தலில், 76.19 சதவீத ஓட்டுகள்பதிவாகின.இரண்டாம் கட்ட தேர்தல், நாளை நடக்க உள்ளது.அன்று, 255 மாவட்ட கவுன்சிலர்; 158 ஊராட்சி ஒன்றியங்களில், 2,544 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள்; 4,924 ஊராட்சி தலைவர்கள்; அந்த ஊராட்சி களில் உள்ள, 38 ஆயிரத்து, 916 கிராம ஊராட்சி கவுன்சிலர்கள் பதவிகளுக்கு ஓட்டுப்பதிவு நடக்கிறது. இரண்டாம் கட்ட தேர்தலில், 1.28 கோடி வாக்காளர்கள், ஓட்டளிப்பதற்காக, 25 ஆயிரத்து, 8 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இப்பகுதிகளில், நேற்று மாலை, 5 மணியுடன், தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது.தேர்தல் பிரச்சாரத்திற்காக, வெளியூர்களி லிருந்து வந்தவர்கள் வெளியேற, தேர்தல் ஆணையம் உத்தர விட்டுள்ளது. நாளை, ஓட்டுப்பதிவு அமைதியாக நடக்க, தேவையான பாதுகாப்பு ஏற்பாடு களை, மாநில தேர்தல் ஆணையம் செய்துள்ளது.
No comments:
Post a Comment