சென்னை, டிச.29 ஈழத்தமிழர் களையும், தேசிய மக்கள் தொகை பதி வேட்டிற்கு எதிராகப் போராடும் சிறுபான் மையின மக்கள் உள்ளிட்ட அனைத்து இந்தியர்களின் உணர்வுகளையும் சிறுமைப் படுத்தி, கொச்சைப்படுத்துவதா என்று முதல்வருக்கு, தளபதி மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் 28.12.2019 அன்று வெளியிட்ட அறிக்கை:
செல் வாக்கு இல்லாத கட்சிகள் ஒன்று திரண்டு மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் நெருக்கடி கொடுக்கின்றன என்று முதல்வர் பிதற்றி, ஈழத்தமிழர் களையும், தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கு எதிராகப் போராடும் சிறு பான்மையின மக்கள் உள்ளிட்ட அனைத்து இந்தியர்களின் உணர்வு களையும் சிறுமைப்படுத்தி, கொச்சைப் படுத்தியுள்ளார். இதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள் கிறேன்.
சொந்த வார்டில் அதிக வாக்கு வாங்க முடியாத-சொந்த நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற முடியாத பழனிசாமி செல்வாக்கு பற்றியெல்லாம் பேசுவது 2019 ஆண்டின் மிகப்பெரிய ஜோக். மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசு இருந்தபோதும், மாநிலத் தில் திமுக அரசு இருந்த போதும் தேசிய மக்கள் தொகைப் பதிவேடு (என்.பி.ஆர்) கொண்டு வரப்பட்டது என்று முதல்வர் பேட்டியளித்திருக்கிறார்.
அப்போது கொண்டு வரப்பட்ட என்.பி.ஆருக்கும், இப்போது பாஜ அரசு கொண்டு வரும் என்.பி.ஆருக்கும் வித்தியாசம் சிறிதும் தெரியாத-அவரது அறியாமை இதில் வெளிப்பட்டுள்ளது. அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் கீழ் கொண்டு வரப்பட்ட தேசிய மக்கள் தொகைப் பதிவேடு தயாரிக்கும் பணி என்பதை அடிப்படையாகக் கொண்டது; குடியிருப்புகளை அடிப் படையாக வைத்துக் கணக்கெடுப்பது. அதற்கே எதிர்ப்பு வந்ததும், அத்திட்டம் கைவிடப்பட்டது. ஆனால் பாஜ கொண்டு வந்திருக்கும் என்.பி.ஆர் என் பது தேசிய குடியுரிமைப் பதிவேடு தயாரிக்க வேண்டும் என்ற ஒரே உள் நோக்கத்துடன், மத ரீதியாகப் பிளவு உண்டாக்கிடக் கொண்டு வரப் பட்டுள்ளது.
பொய்ப் பிரச்சாரம்
பாஜவின் சார்பில் உள்துறை இணை அமைச்சராக இருந்த கிரன் ரிச்சுவும், தற்போது உள்துறை அமைச்சராகவே இருக்கும் அமித்ஷா ஆகியோரும் நாடாளுமன்றத்திலும், தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களிலும் தேசிய மக்கள் பதிவேடு தயாரிப்பது தேசியக் குடியுரிமைப் பதி வேட்டை உருவாக்கவே என்று தெளிவாக பல்வேறு காலக்கட்டங்களில் தெரிவித்து விட்டார்கள். அதன் பிறகும் முதலமைச்சர் மட்டும் ஏதோ தேசியக் குடியுரிமைப் பதிவேட்டிற்கும், இந்த தேசிய மக்கள் தொகை கணக்கெடுப் பிற்கும் சம்பந்தமில்லை என்று கூறுவது அவரது பொய்ப் பிரச்சாரத்தின் புதிய பரிணாமம். ஈழத் தமிழர், சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைவருக்கும் துரோகம் இழைத்து விட்டு கபட நாடகமாடவும் கூடாது; பதவியில் இருக் கிறோம் என்பதாலேயே மக்களிடம் செல் வாக்குப் பெற்று விட்டதாகக் கற் பனைக் கோட்டையை பழனிசாமி தனக்குத் தானே கட்டிக் கொள்ளவும் கூடாது.
தேர்தலை சந்திக்கத் தயாரா?
பணத்தை வாரியிறைத்துப் பெற்ற இடைத் தேர்தல் வெற்றியின் மயக்கத்தில், செல்வாக்கு இருப்பதாக பழனிசாமி நினைத்தால்-முதல்வர் பதவியிலிருந்து விலகி விட்டு இப்போதே சட்ட மன்றத் தேர்தலைச் சந்திக்கத் தயாரா. முதல்வர் வேட்பாளராக அறிவித்துக் கொண்டு, மக்களின் பெரும்பான்மை ஆதரவுடன் வெற்றி பெற்று முதல்வ ரானால் தான், மக்கள் அவர் சொல்வதை நம்புவார்கள். கூவத்தூர் முதலமைச்சர் சொல்வதை யெல்லாம் நம்புவதற்கு, தமிழக மக்கள் ஏமாளிகள் அல்ல என் பதை பழனிசாமி உணர்ந்து பேசுவதும், செயல்படுவதும் அவருக்கு நல்லது என அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment