துபாயில் உலகப்புகழ் பெற்ற விடுதியில் தலைமை சமையற் காரராக பணியாற்றிய அதுல் கோச்சார் என்பவர், காவி அமைப்பினர் நடத்தும் ஒரு குழுவில் உறுப்பினராக உள்ளார். அவர் மாட்டிறைச்சி தொடர்பான விவாதம் ஒன் றுக்கு பதிலளித்த போது, இசுலாமியர்கள் மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள், அவர்களைக் கண்டாலே எனக்கு அருவருப்பாக இருக்கும்'' என்று பதிலளித்து இருந்தார். - இந்தப் பதிவை அந்தக் குழுவில் உள்ள நபர் ஒருவர் அவர் பணிபுரியும் விடுதி நிர்வாகத்தின் கவனத்திற்கு எடுத்துச் சென்றார்.
இதனை அடுத்து அவர் உடனடியாக பணிநீக்கம் செய்யப் பட்டார். இதனை அடுத்து அவர் விடுதி நிர்வாகத்திற்கு, நான் தவறு செய்துவிட்டேன், என்னை மன் னித்து விடுங்கள், மதுபோதையில் நான் என்ன எழுதினேன் என்று எனக்கு தெரிய வில்லை, அந்தப் பதிவே எனது வாழ்க்கை யில் நான் செய்த மோசமான ஒரு பதிவாக இருக்கும். இனி அப்படி செய்யமாட்டேன்'' என்று விளக்கம் கொடுத்திருந்தார். மேலும் அந்த விடுதியில் தலைமை மேலாளராக உள்ள இசுலாமிய நபரிடம் தன்னை மீண் டும் பணியில் சேர்க்கச்சொல்லி "எனக்காகப் பேசுங்கள் இல்லையென்றால் எனது எதிர் காலமே இருண்டு போய்விடும்" என்று மன்றாடினார். அதுமட்டுமல்லாமல் விடு திக்கு உணவு சாப்பிட வந்து அவருக்கு அறிமுகமான துபாயில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடமும் கெஞ்சியுள்ளார். இருப்பினும் துபாய் விடுதி நிர்வாகம் அவரை வேலையில் இருந்து நீக்கி இந்தியாவிற்கு திருப்பி அனுப்பியது.
மேலே குறிப்பிட்ட அனைவருமே இளைஞர்கள். தங்களுடைய திறமையால் அயல்நாடு சென்று பிழைப்பை நடத்து பவர்கள். இவர்களின் மனதை இந்துத்துவா அமைப்பினர் குழப்பி மூளைச்சலவை செய்தனர். இதன் காரணமாக இவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து நாடு திரும்பியுள்ளனர்.
இளைஞர்களே, இந்துத்துவாவின் வலையில் வீழாதீர்! இந்துத்துவாவை நம்பும் பார்ப்பனர் அல்லாதார் சிந்திக் கட்டும்!
No comments:
Post a Comment