அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலம் பிரிமாண்ட் நகர நூலகம் அருகில் 21.12.2019 சனிக்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை, மோடி அரசு நிறைவேற்றிய குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டம், இந்திய ஜனநாயக மதச்சார்பின்மை நண்பர்கள் குழுவின் சார்பில் நடைபெற்றது.
அரசமைப்புக்கும், மதசார்பின்மைக்கும் எதிரான, மக்களை பிளவுபடுத்தக்கூடிய மோடி அரசு நிறைவேற்றிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும், தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர். பின்னர் தோழர்கள் அபு, கார்த்திகேயன், திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி, சிறுபான்மை அமைப்பு மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள், குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய மக்கள் பதிவேடு இதன் ஆபத்தினை சுட்டிக்காட்டி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் அமெரிக்கவாழ் இந்தியர்கள் தமிழ்நாடு, கேரளம், தெலுங்கானா, உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், பஞ்சாப், காஷ்மீர் ஆகிய மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், குழந்தைகள் உட்பட, 500-க்கும் மேற்பட்டவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
தகவல்: கோ.கருணாநிதி
No comments:
Post a Comment