தந்தை பெரியார் நினைவு நாளில் உஸ்மானியா பல்கலைக் கழகத்தில் சூளுரை
அய்தராபாத், டிச.29 பார்ப்பன ஆதிக்க சக்திகளிடமிருந்து விடுதலை பெறவும், பிஜேபி, ஆர்.எஸ்.எஸ். _ இந்துத்துவா பாசிச சக்திகளை வீழ்த்தவும் தேவை தந்தை பெரி யாரே என்று ஆந்திர மாநிலம் உஸ்மானியா பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் சூளுரை ஏற்றனர்.
தெலங்கானா நாத்திக சங்கம், அறிவியல் மாணவர் கூட்டமைப்பு, அகில இந்திய மாணவர் சங்கம், உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து பெரியார் நினைவு நாளில் உறுதி ஏற்றனர்.
மாணவர்களிடையே தெலங்கானா நாத்திக சங்கத் தலைவர் ஜி.டி.சாரய்யா பெரியார் கொள்கைகளை விளக்கி உரையாற்றினார். "தந்தை பெரியார் கொள்கைகளை கிராமங்களிலும், மாணவர்களிடத்திலும் கொண்டு செல்ல வேண்டும். பெரியார் கொள் கைகளை பரப்ப வேண்டும். அதன்மூலம் மட்டுமே பார்ப்பனர்களின் ஆதிக்கத்தைத் தகர்த்தெறிய முடியும். பாஜக, ஆர்.எஸ்.எஸ். _ இந்துத்துவா பாசிச அமைப்பினரிடமிருந்து பெரியார் கொள்கைகளால் மட்டுமே நாட்டை அழிவிலிருந்து காப்பாற்ற முடியும். வேறு தீர்வு ஏதும் கிடையாது. தந்தை பெரியார் கொள்கை வழியில் நாத்திக வழியில் நடைபோடுவோம்" என்றார்.
அறிவியல் மாணவர் கூட்டமைப்பின் தலைவர் ஸ்பார்டகஸ் பேசுகையில், "தந்தை பெரியார்தலைசிறந்த மனிதநேயர். பெண் ணுரிமையாளர், மாபெரும் சமூக புரட்சிக் காரர். அவர் ஒருவர் மட்டுமே பார்ப்பனரல்லா தாருக்காக, சுயமரியாதைக்காக இயக்கம் கண்டவர்.
ஒடுக்கப்பட்ட மக்கள், பெண்கள் கல்வி, உரிமைகளுக்காக தொண்டாற்றியவர். பார்ப்பனர் அல்லாதார் அரசியல் உரிமைகள் பெற வும், சமூக நீதிக்கான இடஒதுக்கீடுக்காகவும் அருந்தொண்டாற்றியவர்.
பார்ப்பனக் கொள்கைகளுக்குக் கடும் எதிரி.
இன்றைக்கு பாசிச இந்துத்துவ பாஜக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினருக்கு எதிராக மாணவர்கள்போராடி வருகின்றனர். ஆனால், நினைத்துப்பார்க்க முடியாத அள வுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பாகவே கிராமங்கள் தோறும் பயணங்கள் செய்து இந்துத்துவ பாசிசத்துக்கு எதிராகக் களம் கண்டவர் தந்தை பெரியார்.
நாம் செய்ய வேண்டியதெல்லாம் தந்தை பெரியார் கொள்கைகளை பரப்புவதுதான்.
வார்க பெரியார், வளர்க அவர்தம் கொள்கை
வெல்க திராவிடர் கழகம்"
இவ்வாறு ஸ்பார்டகஸ் பேசுகையில் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment