பழங்கால பொருட்களை ஒப்படைக்க வலியுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 23, 2019

பழங்கால பொருட்களை ஒப்படைக்க வலியுறுத்தல்


சென்னை, டிச.23  பொது மக்கள், தங்களிடம் உள்ள, வரலாற்றுச் சிறப்புமிக்க பழம்பொருட்களை ஒப்படைக்கும் படி, தொல்லியல் அலுவலர் வலியுறுத்தி உள்ளார்.


தொல் பொருட்களான காசுகள், ஓலைச் சுவடிகள், மணிகள், கல்லாயுதங்கள், வாள்கள், தந்தத்தினாலான கலைப் பொருட்கள் உள்ளிட்டவை, நாட்டின் வரலாற்றுக்கான சான்றுகளாக உள்ளன. இவ்வாறான பொருட்களை, பலர், பரம்பரை பரம்பரையாக, தங்களின் வீடுகளில் சேமித்து வைத்துள்ளனர். சிலர், அவற்றை எடைக்குப் போட்டு விடுகின்றனர்.  இதனால், வரலாற்றுக்கான போதிய சான்றுகள் கிடைக்காத நிலை உள்ளது.


இதுகுறித்து, தமிழக தொல்லியல் துறையின், சென்னை மாவட்ட தொல்லியல் அலுவலர், சிறீகுமார் கூறிய தாவது:


தமிழக வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில், பல்வேறு தொல்பொருட்கள், பொதுமக்களிடம் உள்ளன.


அவற்றைப் பற்றியோ, கல்வெட்டுகள், செப்பு பட்டயங்கள், இடிந்த கோட்டை சுவர், முதுமக்கள் தாழிகள், பாறை ஓவியங்கள் உள்ளிட்ட பொதுவெளியில் உள்ள தடயங்களை பற்றி அறிந்தாலோ, தமிழக தொல்லியல் துறைக்கு தெரிவிக்கலாம்.


தொல்பொருட்களை, அருகில் உள்ள அருங்காட்சியகத்தில் வைப்பதுடன், அவை சார்ந்த தகவல்களையும் தெரியப்படுத்து வோம். தொல்பொருட்கள் பற்றிய தகவல்களை, 98840 58342 என்ற கைப்பேசி எண்ணில் தெரிவிக்கலாம் என்று கூறினார்.


No comments:

Post a Comment