சென்னை, டிச. 29- கூடங்குளம் அணு மின் நிலையத்தின் 4-ஆவது அலகுக்குத் தேவைப் படும் முக்கிய சாதனங்களான - உயர் அழுத்த அணு உலைக் கலன் (Reactor Pressure Vessel) மற்றும் மய்யக் கருவின் அதிநவீன பாதுகாப்பு சாத னம் (Core Catcher) போன்ற வற்றின் முழு இயந்திர தள வாடத் தொகுதி, கூடங்குளம் நோக்கி தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது.
கூடங்குளம் அணு மின் நிலையத்துக்குத் தேவையான தொழில்நுட்பம் முதல், அதன் முக்கிய இயந்திரங்கள் வரை, அனைத்தையும் வடி வமைத்து, விநியோகம் செய்து கட்டியெழுப்பி வரும் ரஷ்ய அரசின் அணு மின் கழகமான 'ரொசாட்டம்' (Rosatom State Atomic Energy Corporation) நிறுவனத்தின் பொறியியல் பிரிவான ஏ.எஸ்.இ. (ASE)-யைச் சேர்ந்தவரும், அந்நிறுவ னத்தின் இந்தியப் பணிகளுக் கான முதல் துணை இயக் குனருமான அலெக்ஸாண்டர் க்வாஷா கூறுகையில்,
“வருடத்தின் இறுதிக் காலம் இது என்பதால், துறை முகத்தில் நிலவி வந்த மிக அதிக பணிச்சுமை நெருக்கடி களையும் தாண்டி, எமது வாடிக்கையாளரின் தேவை முக்கியம் எனக் கருதி, எங்களுக்குத் தரப்பட்ட பணியை உரிய நேரத்தில் நிறைவு செய்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment