கெய்ரோ, டிச. 29- எகிப்து நாட்டில் செங்கடல் பகுதியில் அமைந்த அய்ன் சொக்னா என்ற சொகுசு விடுதியை நோக்கி 2 சுற்றுலா பேருந்து கள் சென்று கொண்டிருந்தன. அவை கெய்ரோ நகரில் லாரி ஒன்றின்மீது மோதி விபத் திற்கு உள்ளானது.
இந்த விபத்தில் இந்தியர் ஒருவர், 2 மலேசிய பெண்கள் மற்றும் எகிப்து நாட்டை சேர்ந்த பேருந்து ஓட்டுனர், சுற்றுலா வழிகாட்டி மற்றும் பாதுகாவலர் ஒருவர் என மொத்தம் 6 பேர் பலியாகினர். மேலும் 24 பேர் காயமடைந் தனர். அவர்களில் பலர் சுற் றுலாவாசிகள் ஆவர். பலரது நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது.
இந்த விபத்தை தொடர்ந்து, சில மணிநேர இடைவேளை யில், எகிப்தின் வட பகுதியில் போர்ட் செட் மற்றும் டேமி யேட்டா ஆகிய நகரங்களுக்கு இடைப்பட்ட சாலையில் பேருந்து மற்றும் கார் மோதி விபத்திற்கு உள்ளானது.
இதில் துணி தொழிற் சாலையில் பணிபுரிந்து வந்த ஆண்கள் மற்றும் பெண்கள் உள்பட 22 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 8 பேர் காயமடைந்தனர்.
தகவலறிந்து அங்கு சென்ற மீட்புக்குழுவினர் அவர்களை மீட்டு அருகிலுள்ள மருத் துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
அடுத்தடுத்து நடைபெற்ற சாலை விபத்துக்களில் சிக்கி இந்தியர் உள்பட 28 பேர் உயி ரிழந்தது எகிப்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment