2019ஆம் ஆண்டு கண்ணோட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 31, 2019

2019ஆம் ஆண்டு கண்ணோட்டம்

ஜனவரி



ஜன. 1: தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை அமலுக்கு வந்தது.


ஜன. 3: கலைஞர் மறைவுக்கு சட்டசபையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம்.


ஜன. 7: பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்திய வழக்கில் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் பதவியை இழந்தார். அவரது இலாகா பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் வசம் ஒப்படைக்கப்பட்டது.


ஜன. 8: விழுப்புரம் மாவட்டத்தை 2 ஆக பிரித்து புதிதாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கப்படும் என சட்ட சபையில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.


சி.பி.அய். இயக்குநர் அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பிய மத்திய அரசின் உத்தரவு  செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு.


ஜன. 12: நலிந்த பொது பிரிவினருக்கு கல்வி, வேலை வாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்ட திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார்.


ஜன. 17: 102ஆவது பிறந்த நாளையொட்டி எம்.ஜி.ஆர். உருவம் பொறித்த ரூ.100, ரூ.5 சிறப்பு நாணயங்களை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.


ஜன. 22: தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடங்கியது. அரசு பணிகள் பாதிப்பு.


பிப்ரவரி


பிப். 1: மத்திய அரசு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர்வு, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்று இருந்தது.


பிப். 2: தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த திரு நாவுக்கரசர் நீக்கப்பட்டு புதிய தலைவராக கே.எஸ்.அழகிரி நியமனம்.


பிப். 11: தமிழக அரசின் ஒப்புதல் இன்றி புதிய அணை கட்டக்கூடாது என்று கேரளாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.



பிப். 13: ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற 1,584 ஆசிரியர்களின் பணி இடைநீக்கம் ரத்து செய்யப்படுவதாக பள்ளி கல்வித்துறை அறிவித்தது.


பிப். 14: தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று சட்டசபையில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு.


காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 40 துணை ராணுவத்தினர் பலி. இதில் தமிழகத்தை சேர்ந்த சுப்பிரமணியன் (தூத்துக்குடி), அரியலூர் மாவட்டம் சிவச்சந்திரன் ஆகியோர் பலியானார்கள். அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.20 லட்சம் உதவித் தொகை அறிவிக்கப்பட்டது.


பிப். 27: இந்திய போர் விமானம் பாகிஸ்தானுக்குள் விழுந்ததில் அதில் இருந்த சென்னையைச் சேர்ந்த விமானி அபிநந்தன் அந்த நாட்டு வீரர்களிடம் சிக்கினார். அவரது காணொலியை பாகிஸ்தான் வெளியிட்டதற்கு இந்தியா கண்டனம்.


மார்ச்


மார்ச் 5: சென்னை சென்டிரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பு.


மார்ச் 10: நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு.


மார்ச் 13: அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக முன்னாள் பிரதமரும், ஜனதா தளம் (எஸ்) கட்சி தலைவருமான தேவேகவுடா அறிவித்தார்.


மார்ச் 18: கோவா முதல் அமைச்சராக பிரமோத் சாவந்த் பதவி ஏற்றார்.


மார்ச் 21: சூலூர் தொகுதி அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் மாரடைப்பால் மரணம்.


மார்ச் 22: திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளர் ஏ.கே. போஸ் வெற்றி பெற்றது செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு.


ஏப்ரல்



ஏப். 1: பி.எஸ்.எல்.வி-சி. 45 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.


ஏப். 8: சென்னை-சேலம் 8 வழி பசுமைச் சாலை திட்டத்துக்கு நிலத்தை கையகப்படுத்தியது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு.


ஏப். 9: தமிழக சட்டசபையில் காலியாக உள்ள அரவக்குறிச்சி,  திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர் தொகுதிகளுக்கு மே 19இல் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.


சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயர் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்.) சென்ட்ரல் ரயில் நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.



ஏப். 11: நாடாளுமன்றத்துக்கு முதல் கட்டமாக உத்தரப்பிரதேசம், மராட்டியம் உள்ளிட்ட 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு.


சீனாவைவிட இரு மடங்கு வேகமாக இந்தியாவின் மக்கள் தொகை வளர்ச்சி கண்டு வருவதாக அய்.நா. தகவல்.


ஏப். 15: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நிர்பய் ஏவுகணை சோதனை ஒடிசாவில் வெற்றிகரமாக நடந்தது.



ஏப். 18: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் அமைதி யாகவும், விறுவிறுப்பாகவும் நடந்தது. 71 சதவிகித வாக்கு பதிவானது.


மே


மே 16: ஆசிரியர் தகுதி தேர்தவில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணி நீக்கம் செய்யும்படி தமிழக அரசுக்கு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது.


தகவல் தொழில்நுட்பத் துறையில் அமெரிக்காவில் அவசர நிலையை அதிபர் டிரம்ப் பிரகடனம் செய்தார்.


மே 18: பிரதமர் மோடி மீதான புகார்கள் குறித்து முடிவு எடுத்த விவகாரத்தில் தேர்தல் ஆணையர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவும் அசோக்வா வசாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.


மே 22: பூமி கண்காணிப்பு செயற்கை கோளை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி.சி. 46 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.



ஓமன் நாட்டைச் சேர்ந்த ஜோகா அல்ஹாத்தி என்ற பெண் எழுத்தாளர் எழுதிய "செலஸ்டியல் பாடீஸ்" என்ற அரபு மொழி நாவல், புகழ்பெற்ற “மேன் புக்கர்" விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது.


மே 23: தமிழகத்தில் நடந்த 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் ஆட்சிக்கு தேவையான (9 இடங்கள்) இடங்கள் கிடைத்தால் ஆட்சிக்கு பாதிப்பு ஏதும் இல்லை. 13 இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றது.



ஒடிசாவில் 5ஆவது முறையாக நவீன் பட்நாயக் ஆட்சியை பிடித்தார்.


அமேதி தொகுதியில் தோல்வியை தழுவிய அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாட்டில் சாதனை வெற்றி பெற்றார்.


மே 26: நாடாளுமன்ற தேர்தலில்  வெற்றி பெற்றதை தொடர்ந்து டில்லியில் நடந்த பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டத்தில் மோடி மீண்டும் பிரதமராக முறைப்படி தேர்வு செய்யப்பட்டார். ஆட்சி அமைக்க அவருக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு விடுத்தார்.


நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 233 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. 479 பேர் பெரும் பணக்காரர்கள் என்னும் தகவல் தனியார் அமைப்பு ஆய்வில் வெளியானது.


ஆந்திர முதல் அமைச்சராக ஜெகன் மோகன் ரெட்டி தேர்வு.


மே 28: குறுவை சாகுபடிக்காக தமிழகத்துக்கு 9.2 டி.எம்.சி. தண்ணீரை கருநாடகம் திறந்து விட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு.


மே 31: மத்திய அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கப்பட்டது. அமித்ஷா-உள்துறை, நிர்மலா சீதாராமன்-நிதி, ராஜ்நாத்சிங் -ராணுவம், ஜெய்சங்கர்-வெளியுறவுத்துறை.


ஜூன்


ஜூன் 1: அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கான ஆண்டு வருமான உச்சவரம்பை ரூ.72 ஆயிரமாக உயர்த்தி அரசு உத்தரவு.


காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு.


ஜூன் 3: தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து புதிய கல்விக்கொள்கை அறிக்கையில் மத்திய அரசு திருத்தம் செய்தது. இதனால் பள்ளிகளில் இந்தி மொழி பாடம் கட்டாயம் என்ற நிலை நீங்கியது. 3ஆவது மொழி பாடத்தை மாணவர்களே தேர்வு செய்ய அனுமதி.



ஜூன் 14: உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ. ராதாமணி மரணம்.


ஜூன் 18: மக்களவை காங்கிரஸ் தலைவராக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நியமனம்.


ஜூன் 29: தமிழகத்தின் புதிய டிஜி.பி.யாக ஜே.கே.திரிபாதியும், புதிய தலைமைச் செயலாளராக கே.சண்முகமும் நியமிக்கப்பட்டனர்.


ஜூலை


ஜூலை 11: தமிழகத்தில் இருந்து நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு ம.தி.மு.க. சார்பில் பொதுச் செயலாளர் வைகோ, தி.மு.க. சார்பில் வில்சன் சண்முகம், அ.தி.மு.க. சார்பில் முகமது ஜான், சந்திரசேகர், பா.ம.க. சார்பில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


ஜூலை 16: இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்ட அஞ்சல் ஊழியர் தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. மாநில மொழிகளில் தேர்வு புதிதாக நடைபெறும் என அறிவித்தது.


ஜூலை 24: உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்பட 9 மொழிகளில் மாற்றம் செய்யப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதாக நாடாளுமன்றத்தில் சட்ட அமைச்சர் தெரிவித்தார்.



ஜூலை 30: மாநிலங்களவையில் கடும் எதிர்ப்புக்கிடையே முத்தலாக் தடை மசோதா நிறைவேறியது.


ஆகஸ்டு


ஆக. 1: குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் போக்சோ மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியது.


முத்தலாக் தடை மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததையடுத்து அது சட்டமானது.


ஆக. 5: காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு தகுதியை குடியரசுத் தலைவர் ரத்து செய்து உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசமாக பிரிக்க வகை செய்யும் சட்ட மசோதாவை மத்திய அரசு மாநிலங்களவையில் தாக்கல் செய்தது. காஷ்மீரில் மெகபூபா, உமர்அப்துல்லா உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் சிறை வைப்பு.


ஆக. 9: வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் (4,85,340) வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. ஆதரவுடன் போட்டியிட்ட புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் (4,77,199) 8141 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.


ஆக. 10: டில்லியில் நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் கட்சியின் புதிய இடைக்கால தலைவராக சோனியா காந்தி ஒரு மனதாக தேர்வு.


ஆக. 15: தமிழகத்தில் வேலூர் மாவட்டம் 3 ஆக பிரிக்கப்பட்டு திருப்பத்தூர், ராணிப்பேட்டையை தலைமையிடமாக கொண்டு 2 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்டும் என சுதந்திர தின விழாவில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.


முப்படைகளுக்கும் ஒரே தளபதி நியமிக்கப்படுவார் என சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி பேசினார்.



ஆக. 31: வங்காளதேசத்தில் இருந்து ஊடுருவியவர்களை அடையாளம் காண்பதற்காக அசாம் மாநிலத்தில் தேசிய குடி மக்கள் பதிவேடு தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டு இருக்கிறது. இதில் 19 லட்சம் பேரின் பெயர்கள் இடம் பெறவில்லை. எம்.எல்.ஏ. ஆனந்தகுமார் பெயரும் அதில் இடம் பெறவில்லை.


செப்டம்பர்


செப். 1: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி.கே.தஹில் ரமானி மேகாலயா மாநிலத்துக்கு மாற்றம் செய்யப்பட்டார்.



செப். 2: சந்திரயான்-2 ஆர்பிட்டரில் இருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிந்தது.


செப். 7: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே.தஹில் ரமானி பதவி விலகினார்.



நிலவில் தரையிறங்கும் போது விக்ரம் லேண்டரும் தகவல் தொடர்பு திடீரென்று துண்டிக்கப்பட்டதால் அதன் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை. இது சந்திராயன்-2 திட்டத்தில் ஏற்பட்ட பின்னடைவு ஆகும்.


செப். 25: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து முறைகேட்டில் ஈடுபட்டு தேனி மருத்துவ கல்லூரியில் சேர்ந்த சென்னை மாணவர் உதித்சூர்யா, குடும்பத்தினருடன் திருப்பதியில் கைது.


செப். 26: மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் மேலும் 5 மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்து இருக்கும் என அதிர்ச்சி தகவலை சி.பி.சி.அய்.டி. காவல்துறையினர் தெரிவித்தனர்.


அக்டோபர்


அக். 8: சுவிஸ் வங்கிகளில் கருப்புப் பணம் வைத்துள்ள இந்தியர்கள் தொடர்பான முதல் கட்ட தகவல்களை இந்தியா பெற்றது.



அக். 11: எத்தியோப்பிய பிரதமர் அபி அகமதுவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு.


அக். 17: பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியாக நியமனம்.


அக். 28: உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக எம்.ஏ.போப்டே நியமனம்.


நவம்பர்


நவ. 9: அயோத்தியில் உள்ள 2.77 ஏக்கர் நிலம் இந்து அமைப்புக்கு சொந்தமானது என்றும், அதில் ராமர் கோவில் கட்ட அனுமதி அளித்தும் உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், மசூதி கட்ட அயோத்தியில் வேறு ஒரு இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்கவும் உத்தரவிட்டது.


நவ. 19: மேயர், நகராட்சி தலைவர் பதவிகளுக்கு நேரடி தேர்தல் இல்லாமல் மறைமுக தேர்தல் நடத்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு. இதற்கான அவசர சட்டம் பிறப்பிப்பு.


நவ. 20: நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு.



நவ. 26: தமிழகத்தின் 34ஆவது மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உதயமானது.


நவ. 29: தமிழ்நாட்டின் 37ஆவது மாவட்டமாக செங்கல்பட்டு மாவட்டத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.


நவ. 30: மராட்டிய சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரே அரசு 169 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் பெற்றி பெற்றது.


டிசம்பர்


டிச. 4: நாடாளுமன்ற, சட்டசபைகளில் எஸ்.சி.எஸ்.டி. தனித் தொகுதிகளை மேலும் 10 ஆண்டுகள் நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.


டிச. 6: தமிழகத்தில் 9 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு.


டிச. 9: கருநாடக சட்டசபையில் காலியாக உள்ள 15 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 12 தொகுதிகளில் பாரதீய ஜனதா வென்றது. இதனால் எடியூரப்பா ஆட்சி தப்பியது.


டிச. 17: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்புக்கு தேசத் துரோக வழக்கில், இஸ்லாமாபாத் சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை (தூக்கு) விதித்தது.


டிச. 18: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு.


“சூல்" நாவலுக்காக எழுத்தாளர் சோ, தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு.


டிச. 20: தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 2 லட்சத்து 31 ஆயிரத்து 890 பேர் போட்டி. 18,570 பேர் போட்டியின்றி தேர்வு.


டிச.27: தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதல் கட்டமாக 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட  மொத்தம் 45 ஆயிரத்து 336 பதவி இடங்களுக்கான முதல் கட்ட தேர்தல்  நடைபெற்றது.


டிச.30: தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டாம் கட்டமாக 158 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட மொத்தம் 46 ஆயிரத்து 639 பதவி இடங்களுக்கான வாக்குப்பதிவு  நடைபெற்றது.


No comments:

Post a Comment