சென்னை, டிச.29 பொங்கல் விடுமுறை ரத்து என்று கூறி விட்டுஎதிர்ப்பிற்கு பின்பு
பள்ளிக்கல்வித்துறை பின் வாங்கியது.
தமிழர்களின் விழாவான பொங்கல் விழாவை குடும்பத் தினர் ஒன்றிணைந்து கொண் டாடுவது வழக்கம்.
இந்நிலையில், ஜனவரி 16ஆம் தேதி பொங்கல் விடுமுறை நாளன்று, பிரதமர் மோடி உரையாற்ற உள்ளதால், மோடியின் உரையை கேட்க 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாண வர்கள் பள்ளிக்கு கட்டாயம் வர வேண்டும் ஆசிரியர் வருகைப்பதிவேடு எடுக்கவேண்டும் என பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி இருந்தது.
இதற்கு திமுக தரப்பில் கடுமையான எதிர்ப்பு மற்றும் போராட்ட அறிவிப்பு விடுத்ததை அடுத்து தமிழக பள்ளிக் கல்வித் துறை மற்றொரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் ஜனவரி 16ஆம் தேதி மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்று எந்த உத்த ரவும் இல்லை என்றும், வீடுகளில் பார்க்க முடியாத மாணவர்கள் விரும்பினால் பள்ளிக்கு வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் விடுமுறை ரத்து எதிர்ப்பு வந்தவுடன் அந்த ரத்து, ரத்து செய்யப்பட்டு விட்டது.
No comments:
Post a Comment