மருத்துவ படிப்புகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 50 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 29, 2020

மருத்துவ படிப்புகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 50 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்

உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. சார்பில்


டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி. வழக்கு



புதுடில்லி, மே 29- மருத்துவ படிப் புகளில்  இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. வழக்கு தொடர்ந்துள்ளது.   உச்சநீதிமன் றத்தில் தி.மு.க. சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில்,


மருத்துவம் மற்றும் பல் மருத்துவ இளநிலை, முதுநிலை பட்டயப் படிப்பிற்கான இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு தமிழகத்தில் 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என குறிப் பிடப்பட்டுள்ளது. இதனை நடப்பு கல்வியாண்டில் அமல்படுத்த வேண்டும் என்றும், 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அமல்படுத்தாமல் தமிழகத்தில் நீட் கலந் தாய்வை நடத்தக் கூடாது எனவும் மனுவில் கோரப் பட்டுள்ளது. அதேபோல், கடந்த  9ஆம் தேதி வெளியிடப்பட்ட 2020ஆம் ஆண்டுக்கான முதுகலை நீட் தேர்வு முடிவுகளை எதிர்த்தும், தி.மு.க. சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி. உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.


No comments:

Post a Comment